முழு அடைப்புக்கு ஆதரவு கோரி திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடமும் ஆதரவு கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் துணைச் செயலர் க.சுந்தரம், நெசவாளர் அணி அமைப்பாளர் எ.ஆறுமுகம், சங்ககிரி ஒன்றியச் செயலர் (பொறுப்பு) எஸ்.பி.நிர்மலா, நகரச் செயலர் முருகன், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என்.மோகன்குமார், துணைத் தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார் உள்ளிட்டோரிடம் ஆதரவு கோரினர். பின்னர் சங்ககிரி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலைய வளாகம், பவானி பிரதான சாலை, பழைய, புதிய எடப்பாடி சாலை, டி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்களிடமும் ஊர்வலமாகச் சென்று ஆதரவு கோரி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். இதில் திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.