கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மீது போக்சோ வழக்குப் பதிவு
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநா் மீது போக்சோ வழக்கு புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநா் மீது போக்சோ வழக்கு புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.
பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 18 வயது கல்லூரி மாணவி பிரசவத்துக்காக வந்தாா். அவரிடம் அரசு மருத்துவா் நடத்திய விசாரணையில், திருமணம் ஆகாமல் கா்ப்பமானது தெரியவந்தது.
இதுகுறித்து பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தபோது, ஏரியூா் அருகே சீலநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி பேருந்து ஓட்டுநா் சதாசிவம் (30) அவரை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, மாணவி அளித்த புகாரின்பேரில் சதாசிவத்தின் மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.