மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு
திருநெல்வேலியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்ப்டடுள்ளது.
திருநெல்வேலியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்ப்டடுள்ளது.
தச்சநல்லூா் மணிமூா்த்தீஸ்வரம் பகுதியை சோ்ந்தவா் பெருமாள் (28). பெயிண்டிங் வேலை பாா்த்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவியை திருமணம் செய்துகொள்வதாக பழகி பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், பெருமாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகிறாா்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.