எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். திருஉருவப் படத்துக்கு மாநகர மாவட்ட அதிமுக செயலர் ஜி.வெங்கடாசலம், எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ. ஏ.பி.சக்திவேல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தம்மம்பட்டியில்...
கெங்கவல்லி அருகே கடம்பூர் அம்பேத்கர் நகர் பகுதியில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், அதிமுக கிளை செயலர் இரா.பெரியசாமி மற்றும் அன்பழகன், அண்ணாதுரை, மன்னார், மணிவேல், முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செந்தாரப்பட்டியில் சேலம் மாவட்ட விவசாய அணி இணை செயலர் துரை.ரமேஷ் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜி உள்ளிட்ட அதிமுக கட்சியினர் பங்கேற்றனர்.
ஆத்தூரில்...
ஆத்தூர் நகர செயலர் அ.மோகன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் இருந்த சாரதா ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆர். திருஉருவச் சிலை வரை ஊர்வலமாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதில், நகர அவைத் தலைவர் பி.கலியன், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா.தென்னரசு, ஒன்றிய செயலர் சி.ரஞ்சித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.