முகப்பு
சேலம்

மாண்ட்போர்டு பள்ளியில் 102-ஆவது ஆண்டு விளையாட்டு விழா

ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளியில் 102-ஆவது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 9:36 am IST
பகிர்:

ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளியில் 102-ஆவது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் கர்னல் ஜெயந்த் பூவையா தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் அருள்சகோதரர் சூசைஅலங்காரம் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் முன்னாள் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்புகள்  நடைபெற்றன. தடகளப் போட்டிகள், நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. பிற்பகல் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்களை சிறப்பு விருந்தினர் மனைவி பொன்னு வழங்கினார்.  தடகளம் , அணிவகுப்புக்கு  ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கேடயத்தை  கேபிரியல் அணிக்கும்,  நீச்சல் , டிரில் டிஸ்பிளே போட்டிக்கு  பேட்ரிக் அணிக்கும்,  நல்லொழுக்கத்துக்கு மாணவி மாண்ட்போர்டு  அணிக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. விழாவில்  மாண்ட்போர்டு அருள் சகோதரர்கள்   அகஸ்டின், செபாஸ்டின் , பீட்டர்ராஜன்,போஸ்கோ, கே.வி பால், அலெக்ஸ், முன்னாள்  மாண்ட்போர்ட் பள்ளி  முதல்வர்கள் ஜார்ஜ் கே.ஜே, வர்கீஸ், கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments