வாழப்பாடி இலக்கியப் பேரவையில் முப்பெரும் நினைவேந்தல் கூட்டம்
வாழப்பாடி இலக்கியப் பேரவையில், முன்னாள் முதல்வர் காமராஜர், கவிஞர் கண்ணதாசன், நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு முப்பெரும் நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி இலக்கியப் பேரவையில், முன்னாள் முதல்வர் காமராஜர், கவிஞர் கண்ணதாசன், நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு முப்பெரும் நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கியப் பேரவையின் முப்பெரும் நினைவேந்தல் கூட்டத்துக்கு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முருகாவரதராஜன் தலைமை வகித்தார். தாளாளர் செந்தில்குமார் வரவேற்றார். ஆசிரியர் முருகேசன், ஜெயசக்தி ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்ணதாசனும் சிவாஜியும் என்ற தலைப்பில் கவிஞர் பழனிவேலு, கர்மவீரர் காமராஜரின் கல்விநலம் என்ற தலைப்பில் கவிஞர் கணேசன், புலவர் கதிர்வேல், நடிகர் திலகத்தின் இளமைக்கால வரலாறு குறித்து ஆய்வறிஞர் சுப்பிரமணியன், சிவாஜி கணேசனின் கலைத்திறன் குறித்து ஆடிட்டர் குப்பமுத்து, முப்பெரும் ஆளுமைகள் குறித்து தமிழன் முத்துராமாராசா ஆகியோரும், கண்ணதாசன் யதார்த்தங்கள் குறித்து இலக்கியப் பேரவை செயலாளர் ஆசிரியர் சிவ.எம்கோ ஆகியோரும் விளக்கினர்.
இக்கூட்டத்தில், புலவர் செல்வக்குமார், மதியழகன், பாலுசாமி, தமிழ்சிறகு செந்தில்குமார், சரவணன், பழனிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, காமராஜர், கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு கவிதாஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.