முகப்பு
சேலம்

ஆரோக்கிய பாரத சைக்கிள் பேரணிக்கு சங்ககிரியில் வரவேற்பு

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி  திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு புதுதில்லி நோக்கிச் செல்லும்

Updated On : 5 நவம்பர் 2018, 8:43 am IST
பகிர்:

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி  திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு புதுதில்லி நோக்கிச் செல்லும் ஆரோக்கிய பாரத  சைக்கிள் பேரணிக்கு சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு  அளிக்கப்பட்டது. 
பாதுகாப்பான,  சுகாதாரமான ஊட்டச்சத்தான உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட  உணவை உண்போம் என்பதை வலியுறுத்தும் 30 பேர் கொண்ட ஆரோக்கிய பாரத சைக்கிள் பேரணியை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)  ஜி.வேடியப்பன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்  மருத்துவர் மாரியப்பன் ஆகியோர் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்,  சங்ககிரி வட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன்,  மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ்,   வட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன், அங்கன்வாடி அலுவலர் தெய்வஜோதி,   மாவட்ட உபயோகிப்பாளர் உரிமைக் கழகத்தின் தலைவர் சி.ஜி.இளமுருகன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இந்த ஆரோக்கிய பாரத சைக்கிள் பேரணியின் நோக்கம் குறித்து மாவட்ட  உணவுப் பாதுகாப்பு அலுவலர் விளக்கிக் கூறினார். இதையொட்டி, பல்வேறு வகையான சத்தான உணவு வகைகளை அங்கன்வாடி ஊழியர்கள் தயாரித்து காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். நிலவேம்பு குடிநீரும்  வைக்கப்பட்டிருந்தது. வரவேற்பு விழாவில், சிலம்பம்,  ஒயிலாட்டம், கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள்,  பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட  கலைநிகழ்ச்சிகள்,  சொற்பொழிவுகள் நடைபெற்றன.  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்
வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments