முகப்பு
சேலம்

மர்ம விலங்குகள் கடித்து ஐந்து ஆடுகள் சாவு

ஓமலூர் அருகே மர்ம விலங்குகள் கடித்து  ஐந்து ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. 

Updated On : 5 நவம்பர் 2018, 8:42 am IST
பகிர்:

ஓமலூர் அருகே மர்ம விலங்குகள் கடித்து  ஐந்து ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. 
ஓமலூர் அருகே உள்ள கோட்டை மாரியம்மன்கோவில் ஊராட்சிக்குள்பட்ட  மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த  கோவிந்தன் -கமலா தம்பதி  ஐந்து ஆடுகளை வளர்த்து வந்தனர்.  வீட்டின் அருகில் இவர்கள் கட்டியிருந்த ஐந்து ஆடுகளையும் மர்ம விலங்குகள் கடித்துக் கொன்றன. கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் மர்ம விலங்குகள் நடமாட்டம் இருப்பதாகவும்,   வயலில் மேய்ந்துகொண்டு இருக்கும் ஆடுகளைக் கடித்து ரத்தத்தைக் குடித்து வருவதாகவும்  விவசாயிகள் கூறுகின்றனர். 
இந்தச் சம்பவம் குறித்து ஓமலூர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
சம்பவ இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து  வனத்துறையினர் விசாரணை செய்து
வருகின்றனர்.  
ஆடுகளைக் கடித்துக் கொன்றது செந்நாய்களாகவும்,  காட்டுப் பூனைகளாகவும் இருக்கலாம் என்றனர். 
அதனால், ஆடு, மாடுகளை மேய்க்கும்போது விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டு என்றும், மர்ம விலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments