முகப்பு
சேலம்

குடியரசு தினத்தன்று மதுபானக் கடைகளை மூட உத்தரவு

குடியரசு தினத்தை முன்னிட்டு  சேலம் மாவட்டத்தில்  மதுபானக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களை

Updated On : 23 ஜனவரி 2019, 8:44 am IST
பகிர்:

குடியரசு தினத்தை முன்னிட்டு  சேலம் மாவட்டத்தில்  மதுபானக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர்  தெரிவித்ததாவது: தமிழக அரசாணையின்படி  வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும்  எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபான கடைகள், மது அருந்தும் கூடங்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். 
மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.