பசுமை மைய அறக்கட்டளை செயற்குழுக் கூட்டம்
ஆத்தூரில் பசுமை மைய அறக்கட்டளை செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரில் பசுமை மைய அறக்கட்டளை செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தேசிய புறவழிச் சாலையில் அமைந்துள்ள இதய நிறைவு தியான மண்டப வளாகத்தில், ஆத்தூர் பசுமை மைய அறக்கட்டளை செயற்குழுக் கூட்டம் ராசி விதைகள் குழுமத் தலைவர் எம்.இராமசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கவும், தேசிய புறவழிச் சாலையில் முல்லைவாடி பிரிவு சாலையில் சூரிய சக்தி மின்விளக்கு அமைக்கவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மரக்கன்றுகள் நடவு மற்றும் நாற்றங்கால் பணியில் ஈடுபடுத்தும்படி நிகழ்வுகளை அமைத்து மாணவர்களுக்கு சான்று மற்றும் ஊக்கப்பரிசு வழங்கும் வகையில் நிகழ்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
இதில் அறக்கட்டளை பணி மேற்கொள்ள ரூ.50 ஆயிரத்தை ஓய்வுபெற்ற மாவட்ட வன அலுவலர் டி.மணியிடம் வழங்கினார். ஆத்தூர் பசுமை மைய அறக்கட்டளை அறங்காவலர்கள் ஏ.எஸ்.மாதேஸ்வரன், தேவராஜ், எம்.ஜெய்கணேஷ், எம்.அருண்குமார், செந்தில்ஐயர், பாலமுருகன், பி.ராஜா, விஎன்எம்.பிரகாஷ், ஏ.ஜோ,
ஏ.அர்த்தனாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.