இந்த சீசன் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடினோம்: துருவ் ஜுரெல்
நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறத் தவறியது.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு விக்கெட் கீப்பராக பந்துவீச்சாளர்களிடம் பேசும்போது, அவர்களிடம் நீங்கள் இப்படி பந்துவீசுங்கள் என ஒருபோதும் நான் கூறியதில்லை. நீங்கள் மிகவும் நன்றாக பந்துவீசக் கூடியவர்கள், அதன் காரணமாக அணியில் இடம்பெற்று விளையாடுகிறீர்கள் என்பதையே அவர்களிடம் கூறுவேன். அணியில் இணைந்துள்ள வீரர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.
அணியில் உள்ள வீரர்களிடத்தில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் எனக் கூறினேன். எந்த மாதிரியான பந்துவீச்சை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தாலும், உங்களது திட்டங்களில் தெளிவாக இருங்கள் எனக் கூறினேன். அதிகம் யோசிக்காதீர்கள். நாம் நன்றாக விளையாட வேண்டியிருக்கிறது. நேர்மறையான கிரிக்கெட்டினையும் விளையாட வேண்டியிருக்கிறது எனக் கூறினேன். நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதுமே நாங்கள் அனைவரும் நேர்மறையான கிரிக்கெட்டினை விளையாடினோம் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரெல் 16 போட்டிகளில் 515 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Rajasthan Royals player Dhruv Jurel has stated that he played positive cricket throughout the current IPL season.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.