FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பும்ரா, கம்மின்ஸ் என்றெல்லாம் சூர்யவன்ஷி பார்க்கமாட்டார்... துருவ் ஜுரெல் புகழாரம்!

வைபவ் சூர்யவன்ஷி குறித்து துருவ் ஜுரெல் கூறியிருப்பதாவது...

கம்மின்ஸ், பும்ரா, சிராஜ், ஹேசில்வுட். நடுவில் சூர்யவன்ஷி. - படங்கள்: ஏபி, ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல்.
பகிர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பந்துவீச்சாளர்கள் பும்ரா, கம்மின்ஸ் என்றெல்லாம் பார்க்கமாட்டார் அடித்து நொறுக்குவார் என சக வீரர் துருவ் ஜுரெல் கூறியுள்ளார்.

நேற்றிரவு (மே.27) நடந்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 243/8 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் 19.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆட்ட நாயகன் விருது உள்பட பல விருதுகளை வென்றார்.

Advertisement

Advertisement

இந்த சீசனில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹேசில்வுட், ககிசோ ரபாடா ஓவர்களையும் சூர்யவன்ஷி அடித்து நொறுக்கியுள்ளார். அந்த வரிசையில் கம்மின்ஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. 15 வயதான இவரது பேட்டிங் குறித்து சக வீரர் துருவ் ஜுரெல் கூறியிருப்பதாவது:

வைபவ் சூர்யவன்ஷியிடம் நான் பார்த்தவரைக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் அதிகமாக பயிற்சி செய்தாலும் அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை; தன்னை எப்போதுமே அவர் முழுமையாக நம்புகிறார். ஒவ்வொரு முறையும் களத்தில் அவர் அதைத்தான் செய்கிறார்.

இதைச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு இருப்பதே இல்லை. அவரை முழுமையாக நம்புவதுதான் அவரது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கிறது.

நாம் பயிற்சிப் பள்ளியில் சேரும்போது, பந்துவீச்சாளர்களைப் பார்க்காதே, பந்தை மட்டுமே பாருங்கள் எனக் கூறுவார்கள். மிகப்பெரிய வீரர்கள் என நாம் எப்போதுமே பந்து வீச்சாளர்களையே பார்க்கிறோம். ஆனால், சூர்யவன்ஷி பந்தை மட்டுமே பார்க்கிறார்கள்.

சூர்யவன்ஷியின் தாரக மந்திரம் இதுதான் - பந்துவீச்சாளர்கள் யாரென்றெல்லாம் பார்க்கமாட்டார். அது பும்ரா, கம்மின்ஸ் யாராக இருந்தாலும் அவருக்குக் கவலையில்லை என்றார்.

summary

Bumrah or Cummins, Jurel says Sooryavanshi doesn't give a damn about the bowler

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments