முகப்பு
கிரிக்கெட்

“16 வயதில் சச்சினை நினைவுபடுத்துகிறார் சூர்யவன்ஷி” - கபில்தேவ் புகழாரம்

வைபவ் சூர்யவன்ஷி, 16 வயதிலேயே சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துவதாக கபில்தேவ் புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி...

Updated On : 25 ஜூன் 2026, 4:14 pm IST
வைபவ் சூர்யவன்ஷி - படம்: ராஜஸ்தான் ராயல்ஸ் (எக்ஸ்)
பகிர்:

இந்திய அணியின் இளம்வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 16 வயதிலேயே சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துவதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான இளம் வீரர் 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியில் மிரட்டினார். இரண்டு சதங்கள் விளாசிய அவர் ப்ளே-ஆஃப் சுற்றில் இரண்டு போட்டிகளில் 90 ரன்களுக்கும் மேல் குவித்து அசத்தியிருந்தார்.

சர்வதேச வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் அதிரடியாக விளையாடிய அவர், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியையும் வென்றார்.

Advertisement

Advertisement

சமீபத்தில், இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரின் இறுதிப்போட்டியிலும், 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்திருந்தார்.

டி20 தொடர்களுக்கான தேசிய அணியிலும் இடம்பிடித்துள்ள அவர், நாளை நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

வைபவ் சூர்யவன்ஷி அவரது கிரிக்கெட் பயணத்தின் முடிவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனைகள் படைத்திருப்பார் எனப் பலரும் புகழ்ந்து வரும் சூழலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்தவருமான கபில்தேவ், “வைபவ் சூர்யவன்ஷி, 16 வயதிலேயே சச்சின் டெண்டுல்கரை நினைவூட்டுவதாகத்” தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “வைபவ் மிகவும் இளவயது வீரர். ஆனால், அவன் ஒரு தனித்துவமான திறமை கொண்டவன், அவ்வளவுதான். அவன் 16 வயது சிறுவன், அவனிடம் இருப்பது எல்லாம் கிரிக்கெட் மட்டுமே.

அவனுக்கு 20-22 வயது ஆகும்போது, ​​நாம் அவரை மதிப்பிடலாம். ஆனால் அவரது திறமை அபரிமிதமானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அவன் 16 வயதிலேயே சச்சின் டெண்டுகரைப் போன்று இருக்கிறான். அவனால் நீண்டகாலம் விளையாட முடியுமா? அவன் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது” என்றார்.

summary

India's first World Cup-winning captain, Kapil Dev has compared Vaibhav Sooryavanshi to a young Sachin Tendulkar, but said it is far too early to judge the teenager's career.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments