FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷி குறித்து அதிகம் பேச விரும்பவில்லை: கபில் தேவ்

வைபவ் சூர்யவன்ஷி குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 ஜூலை 2026, 10:26 pm IST
வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ
பகிர்:

வைபவ் சூர்யவன்ஷி குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அண்மையில் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. அதன் பின், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றார். இருப்பினும், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் களமிறக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் இந்திய அணிக்காக அறிமுகமானார். அறிமுகப் போட்டியில் அவர் 14 ரன்கள் எடுத்தார்.

Advertisement

Advertisement

மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் 13 மற்றும் 15 ரன்கள் முறையே எடுத்தார். ஐபிஎல் தொடரில் விளையாடிய அதிரடி ஆட்டத்தை அவரால் தொடர முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மீண்டும் சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டார்.

இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. அவர் மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவரது திறமையை நாம் பார்த்துள்ளோம். அவர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. அவருக்கு 15 வயதுதான் ஆகிறது. அவரது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

summary

Former Indian captain Kapil Dev has stated that he does not wish to speak much about Vaibhav Suryavanshi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments