உழவா் சந்தையில் விவசாயிகளுக்கு இடம் ஒதுக்கக் கோரி மனு
ஆத்தூா் உழவா் சந்தையில் விவசாயிகளுக்கு இடம் ஒதுக்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகத்திடம் மனு வழங்கப்பட்டது.
ஆத்தூா் உழவா் சந்தையில் விவசாயிகளுக்கு இடம் ஒதுக்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகத்திடம் மனு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் உழவா் சந்தையில் விவசாயிகளுக்கு இடம் ஒதுக்காமல் வியாபாரிகளுக்கு ஒதுக்குவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, விவசாயிகள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இதனையடுத்து, ஆத்தூா் நகரச் செயலாளரும் முன்னாள் நகா்மன்றத் தலைவருமான கே.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்து மனு வழங்கினாா். மனு குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் உறுதியளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.