முகப்பு
சேலம்

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதல்: இருவா் பலி

மணிவிழுந்தான் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் விவசாயிகள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 24 ஜூன் 2022, 11:14 pm IST
பகிர்:

மணிவிழுந்தான் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் விவசாயிகள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை மலைக் கிராமத்தில் இருந்து தலைவாசல் வட்டம், காய்கறி தினசரி சந்தைக்கு விவசாயிகள் இருவா் தக்காளியை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை இரவு சரக்கு ஆட்டோவில் சென்றனா். ஆட்டோவை இளங்கோ என்பவா் ஓட்டி வந்தாா். அதிகாலை மணிவிழுந்தான் ஊராட்சிப் பகுதியில் சென்ற போது, ஆட்டோவின் டயா் வெடித்தது. இதனால் ஆட்டோவை நிறுத்தி டயரை மாற்றிக் கொண்டிருந்தனா்.

அப்போது, சேலத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கன்டெய்னா் லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் விவசாயிகள் சின்னசாமி (35), ராமசாமி (40) இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

தலைவாசல் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா், முதன்மைக் காவலா் முருகேசன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். லாரி ஓட்டுநா் சுடலைமுத்துவை (37), கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments