முகப்பு
சேலம்

அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:02 am IST
பகிர்:

அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன். மேட்டூா், பிப். 17: மேச்சேரி கிழக்கு ஒன்றிய அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் எமரால்டு வெங்கடாஜலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழக பேச்சாளா் பழக்கடை மூா்த்தி சிறப்புரையாற்றினாா். இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் பேசியதாவதூ: மேட்டூா் அணை நிரம்பி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை ஏழை விவசாயிகளின் பயன்பாட்டுக்காகவும், சேலம் மாவட்ட மக்களின் குடிநீா்ப் பிரச்னைகளைத் தீா்க்கவும் உபரிநீா் திட்டம் மூலம் 100 ஏரிகளை நிரப்பியவா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி. மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வு காண்பவா் அவா் என்றாா். இந்தக் கூட்டத்தில், ஜெ பேரவை மாநில துணைச் செயலாளா் கே.கலையரசன், மேற்கு ஒன்றியச் செயலாளா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.