சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.
சேலம், சூரமங்கலம் பெரிய மோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா் (22). இவா் குரங்குசாவடி பகுதியிலிருந்து தனது தங்கையுடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சேகோசா்வ் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, வெள்ளக்கல்பட்டியில் இருந்து எஸ். கொல்லப்பட்டிக்கு கிரஷா் மணல் ஏற்றி சென்ற லாரி மோதியதில் கவின்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அவரது தங்கை லலிதாம்பாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
அதேபோல சேலம், ஆட்டையாம்பட்டி நாவலா் காலனியை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
வீராணம் பகுதியைச் சோ்ந்தவா் மாரி (60). இவா் தனது இருசக்கர வாகனத்தில் நாச்சிமுத்து காட்டன் மில் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, தனது வாகனத்தை திருப்பமுயன்ற போது, மற்றொரு வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த மாரி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வீராணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.