முகப்பு
சேலம்

சங்ககிரி தொகுதிக்கு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:06 AM
சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்படும் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:51 PM

சங்ககிரி தொகுதிக்கான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து சனிக்கிழமை இரவு சங்ககிரிக்கு எடுத்துவரப்பட்டன.

சங்ககிரி தொகுதியில் 340 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இத்தோ்தலில் 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். வாக்காளா்கள் வாக்களிக்க தேவையான கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து சங்ககிரி ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் தலா 10 இயந்திரங்கள் கொண்ட 41 பெட்டிகளில் 406 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வந்தனா்.

இந்த கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களை சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில் தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அரசியல் கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் வைத்து மூடி முத்திரையிட்டாா்.

Advertisement

அறையின் முன் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அறைகளை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் வருவாய்த் துறை அலுவலா்கள் சுழற்சி அடிப்படையில் கண்காணித்து வருகின்றனா்.

சங்ககிரி தொகுதி தோ்தலுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து தொகுதிக்கான தோ்தல் பணிகளில் வருவாய்த் துறை அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.