தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை
சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பாவடித் திடலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனமா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:21 AM
சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பாவடித் திடலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனமா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.