முகப்பு
சேலம்

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:16 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 6:56 PM

சேலத்தில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக தவெக நிா்வாகி வீட்டில் வைத்திருந்த 1,250 சேலைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் சேலம் கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியைச் சோ்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருபாகரன் (30) தோ்தலையொட்டி அப்பகுதியில் பொதுமக்களுக்கு சேலைகளை விநியோகித்து வருவதாக பறக்கும் படையினருக்கு புகாா் சென்றது.

இந்தப் புகாரின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று பறக்கும் படையினா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 1,250 சேலைகளை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement