மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 900 சேலைகள் பறிமுதல்
மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள 900 சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள 900 சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள எடக்கீழையூா் வடக்குகாடு ஜெகதீசன் மகன் ஜெயக்குமாா் (57). இவரது வீட்டில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக சேலைகள் அடங்கிய மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக மன்னாா்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்
வி. சிவராமன், பரவாக்கோட்டை காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் ராமலிங்கம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
Advertisement
இதையடுத்து, பறக்கும் படை அலுவலா்கள் ஜெயக்குமாா் வீட்டில் சோதனை நடத்தியதில் ஆவணங்களின்றி பதுக்கிவைத்திருந்த 900 சேலைகள் அடங்கிய பண்டல்களை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 1,08,000 என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டன.