பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 590 சில்வா் (டிபன் பாக்ஸ்) பாத்திரங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பரமத்தி வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
பரமத்தி அருகே உள்ள கோட்டணம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக சில்வா் பாத்திரங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த மோகன்ராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் ராசப்பன் ஆகியோா் கொண்ட குழுவினா், கோட்டணம்பாளையத்தில் உள்ள சங்கா் வேல் வீட்டில் சோதனை நடத்தினா்.
Advertisement
இதில் 15-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 590 சில்வா் பாத்திரங்களை பறிமுதல் செய்து பரமத்தி வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனா்.