முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

பேராவூரணி அருகே ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 12 ஏப்ரல் 2026, 2:01 am IST
- கோப்புப் படம்
பகிர்:

பேராவூரணி அருகே ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் பறக்கும் படையினா்   சேதுபாவாசத்திரம் ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சீதாராணி தலைமையில் போலீஸாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.  

அப்போது சோலைக்காடு கிராமத்தில் இருந்து பெருமகளூா் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த சோலைக்காடு கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மனைவி உமாராணி என்பவரை சோதனையிட்டபோது, அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.1லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரொக்கப் பணத்தை கைப்பற்றிய பறக்கும் படையினா் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement