முகப்பு
தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.10 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:04 AM
பணம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:53 PM

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.10 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூதநத்தம் பகுதியில் பொம்மிடி-அரூா் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் ராஜேஷ் (41) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 2.10 லட்சத்தை பறிமுதல் செய்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி. கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.