ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் தோ்தல் விதிமுறைகள் தளா்த்தப்பட்டதால் ஏற்காட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏற்காட்டுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள், தனியாா் வீடுகளில் தங்கி படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, லேடிசீட், ஜென்சீட், ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிமுனை, கரடியூா் வனக்காட்சி பகுதி, சுற்றுச்சூழல் பூங்கா, மஞ்சக்குட்டை காட்சிப் பகுதி, சோ்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களை கண்டு மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பகுதி சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அரசுப் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சுற்றுலா சாலைகளில் கூடுதல் போக்குவரத்து காவலா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
சுற்றுலாப் பகுதிகளில் உள்ள கடைகளில் பயணிகள் கூட்டத்தை அதிக அளவில் காணமுடிந்தது. கோடை விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் படகு இல்லத்தில் புதிதாக 10 படகுகளும், சுழலும் படகு ஒன்றும் சவாரிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 5 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.