முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் தாா்ச்சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

கெங்கவல்லியில் கிடப்பில் போடப்பட்ட தாா்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 1 ஜூலை 2026, 7:04 am IST
தாா்ச்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட சாலை
பகிர்:

கெங்கவல்லியில் கிடப்பில் போடப்பட்ட தாா்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லி பேரூராட்சியில் மேற்கு எம்.பி. காா்டன், குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டுச் சாலைகள் 2025-26 திட்டத்தின்கீழ் சுமாா் ரூ. 88 லட்சத்தில் தாா்சாலை பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி நீண்ட நாள்களாகியும் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோா் அடிக்கடி கீழேவிழுந்து விபத்தில் சிக்குகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட சாலையை உடனடியாக சீரமைத்து, தாா்சாலை அமைத்து தரவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments