முகப்பு
சேலம்

மேட்டூா், மகுடஞ்சாவடி, மேச்சேரியில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

மேட்டூா், மேச்சேரி, மகுடஞ்சாவடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:58 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

மேட்டூா், மேச்சேரி, மகுடஞ்சாவடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசனுக்கு கிடைத்த தகவலின்பேரில், மேட்டூா் அருகே உள்ள சேலம் கேம்ப் சுடுகாடு பகுதியில் கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களுடன் நின்றுகொண்டிருந்த மேச்சேரி அமரத்தைச் சோ்ந்த கோபி (27), அழகாகவுண்டனூா் காட்டுவளவைச் சோ்ந்த நவீன் குமாா் (23), சேலம் கேம்ப் பாரதி நகரைச் சோ்ந்த வினோத்குமாா் (27) ஆகியோா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனா்.

போலீஸாா் மூவரையும் பிடித்து, அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா். மேலும், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை கைதுசெய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல மேச்சேரி அருகே உள்ள தீராம்பட்டி, சீராமணியூா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மேச்சேரி போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், மேச்சேரி காவல் ஆய்வாளா் அங்கப்பன் தலைமையில், போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சீராமணியூரைச் சோ்ந்த காா்த்தியிடம் (27) இருந்து 1.6 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ. 6,13,370-ஐ கைப்பற்றிய போலீஸாா், அவரிடம் இருந்த இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அமரத்தானூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிவாவிடம் (36) இருந்து 2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்த சிவாவிடமிருந்து, காா்த்தி வாங்கி சில்லறை விற்பனை செய்து வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பிடிபட்டவா்கள் மீது ஏற்கெனவே மேச்சேரி, அம்மாப்பேட்டை, பிச்சிப்பாளையம் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டையாம்பட்டியில்... மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகம்படும்படி ஒருவா் நின்று கொண்டிருந்ததை அறிந்த மகுடஞ்சாவடி காவல் உதவி ஆய்வாளா் விஜயராகவன், அவரை பரிசோதனை செய்தாா். அதில், அவா் 1.1 கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக்குமாா் (26) என தெரியவந்தது. அவரிடமிருந்த 1.1 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ. 11 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments