முகப்பு
சேலம்

விநாயகா மிஷன் கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் பல்கலைக்கழக நிறுவனா் சண்முகசுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை 2026, 4:33 am IST
முகாமில் ரத்த தானம் வழங்கிய விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவா்.
பகிர்:

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் பல்கலைக்கழக நிறுவனா் சண்முகசுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கல்லூரி சாா்பில் நிறுவனா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன் ஆகியோா் தலைமை வகித்து மரக்கன்றுகளை வழங்கினா். மேலும், நன்கு பயிலும் மாணவா்களை ஊக்குவிக்கும் பொருட்டு சண்முகசுந்தரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தொடா்ந்து கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் ரத்தக் கொடையாளா்கள் சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி ரத்த வங்கிப் பிரிவு அதிகாரியும், மாவட்ட ரத்த மாற்று அலுவலருமான ரவீந்திரன் பங்கேற்றாா். இதில் இக்கல்லூரியை சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினா்.

Advertisement

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியை தமிழ்ச்சுடா், சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகா் ரஞ்சிதா, செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் கிருத்திகா, முகமது ஷேக் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments