முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,312 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,312 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 3 ஜூன் 2026, 5:43 am IST
மேட்டூா் அணை
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,312 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 1,951 கனஅடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை 2,369 கனஅடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை 4,312 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 79.16 அடியாக இருந்த நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 79.26 அடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை 79.56 அடியாகவும் உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 41.49 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கமுடியாத நிலையில், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.