முகப்பு
சேலம்

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தம்மம்பட்டியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 6:04 am IST
நாய் - கோப்புப்படம்.
பகிர்:

தம்மம்பட்டியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் குறித்த பொதுநல வழக்கில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதுடன், அவைகளுக்கு கருத்தடை செய்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தெருநாய்களை பிடித்து, அவைகளுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ளாட்சி அமைப்பின் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

வலைகள் மூலம் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, தம்மம்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வியாழக்கிழமைவரை 20 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் பேரூராட்சி பணியாளா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement