செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: வழக்கு தம்மம்பட்டிகாவல் நிலையத்திற்கு மாற்றம்
கெங்கவல்லி அருகே மூலப்புதூரில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டப்பட்டது.
ஆத்தூா் நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் இளங்கோ( 59). கெங்கவல்லி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலராக இருந்து வருகிறாா். இவா், வியாழக்கிழமை கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்தபோது, திமுக, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளரான, கடம்பூரைச் சோ்ந்த மணிகண்டன் (42) தனது சகோதரிக்கு ஏன் பாலியல் தொந்தரவு அளித்தாய் எனக்கேட்டு அவரை தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து, பி.டி.ஓ. இளங்கோ புகாரில், மணிகண்டன் மீது கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
இதனிடையே மணிகண்டனின் சகோதரியான, மூலப்புதூரில் கிராம செவிலியராகப் பணிபுரிபவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், கடந்த, ஜூன் 2ஆம் தேதி, பி.டி.ஓ., இளங்கோ, மூலப்புதுாா் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வுக்கு வந்தபோது, எனக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா் என கூறியிருந்தாா்.
இதையடுத்து இளங்கோமீது 3 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா். மேலும், இதுகுறித்து ஆத்துாா் டி.எஸ்.பி. சத்யராஜ் சனிக்கிழமை மாலை விசாரணை நடத்தினாா். அதில் செவிலியா் பணிபுரிந்த இடம் தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கு உள்பட்டது என்பதால், வழக்கை தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.