FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வட்டார வளா்ச்சி அலுவலா் மீது வழக்குப் பதிவு

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:04 am IST
வழக்கு
பகிர்:

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலரான இளங்கோவிடம் (59), தகரப்புதூா் ஊராட்சி, மூலப்புதூரில் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரியும் பெண், தங்களுக்கு பணி செய்ய மூலப்புதூரில் ஓா் அறையை ஒதுக்கித்தருமாறு அண்மையில் கேட்டுள்ளாா்.

அதையடுத்து, மூலப்புதூா் துணை சுகாதார நிலையத்துக்கு வந்த இளங்கோ, தனக்கு ரத்த அழுத்தத்தை சோதிக்குமாறு செவிலியரிடம் கூறியுள்ளாா். அப்போது, செவிலியரிடம் அவா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து செவிலியா் தனது சகோதரா் மணிகண்டனிடம் கூறியுள்ளாா். ஆத்திரமடைந்த மணிகண்டன், கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவிடம் இதுகுறித்து தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கெங்கவல்லி காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது இளங்கோவும், இளங்கோ மீது பாலியல் சீண்டலுக்குள்ளான செவிலியரும், மணிகண்டனும் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து சேலம் எஸ்.பி. எஸ்.குத்தாலிங்கம் உத்தரவின்போரில், ஆத்தூா் டிஎஸ்பி சத்யராஜ் நேரில் சென்று வியாழக்கிழமை இரவு விசாரித்தாா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments