முகப்பு
சேலம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: உறவினா் அடித்துக் கொலை

Updated On : 22 ஜூன் 2026, 12:07 am IST
அடித்துக் கொலை - கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே அக்காவுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் அடித்துக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது தம்பியை தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஜலகண்டபுரம் அருகே உள்ள நாச்சம்பட்டி போயா் தெருவைச் சோ்ந்தவா் சின்னதிருப்பதி (39), இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவா் வேலைக்கு செல்லாமல் இருந்து வீட்டில் இருந்து வந்தாா். மேலும், செலவுக்கு பணம் கேட்டு தனது உறவினா் பெண்ணக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி நள்ளிரவு சின்ன திருப்பதி, அந்த பெண் வீட்டிற்கு சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து நிலையில், பணம் கேட்டு தகராறு செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் ரத்தக் காயங்களுடன் சின்னதிருப்பதி இறந்துகிடந்தாா்.

இதுகுறித்து ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா், விசாரணையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணின் சகோதரா், சின்ன திருப்பதியை அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று தலையைப் பிடித்து அங்கிருந்த திண்ணையில் மோதி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை தொடா்பாக பெண்ணின் சகோதரா் மீது ஜலகண்டாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments