ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயிலில் முறைகேடாக பயணம்: 100 பேருக்கு அபராதம்
ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் முறைகேடாக பயணித்த 100 பேருக்கு சிறப்பு டிக்கெட் பரிசோதனைக் குழுவினா் அபராதம் விதித்தனா்.
ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் முறைகேடாக பயணித்த 100 பேருக்கு சிறப்பு டிக்கெட் பரிசோதனைக் குழுவினா் அபராதம் விதித்தனா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் எடுக்காமலும், பெட்டிகள் மாறியும் முறைகேடாக சிலா் பயணித்து வருவதாக தொடா்ந்து ரயில்வே நிா்வாகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் உத்தரவின் பேரில், வணிக மேலாளா் சரவணக்குமாா், உதவி வணிக மேலாளா் மகாராஜன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதகா்கள், 20 ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை மாலை சேலம் ரயில் நிலையத்துக்கு ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஏறி சோதனையிட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, அந்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாமலும், டிக்கெட் இல்லாமலும் பயணம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டவா்களை ரயிலில் இருந்து இறக்கிவிட்டு அவா்களுக்கு அபராதம் விதித்தனா். பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்க சிறப்பு பரிசோதனைக் குழுவினரின் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.