முகப்பு
சேலம்

சங்ககிரி ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் குடமுழுக்கு

சேலம் மாவட்டம், சங்ககிரி பயணியா் மாளிகை அருகே உள்ள மதுரைவீரன் உடனமா் ஸ்ரீ வெள்ளையம்மா, பொம்மியம்மா கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 6:12 am IST
குடமுழுக்கையொட்டி சங்ககிரி பயணியா் மாளிகை அருகே உள்ள ஸ்ரீமதுரைவீரன் உடனமா் ஸ்ரீ வெள்ளையம்மா, பொம்மியம்மா சுவாமிகளுக்கு வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி பயணியா் மாளிகை அருகே உள்ள மதுரைவீரன் உடனமா் ஸ்ரீ வெள்ளையம்மா, பொம்மியம்மா கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மதுரைவீரன் உடனமா் ஸ்ரீ வெள்ளையம்மா, பொம்மியம்மா, சப்தகன்னிமாா் கோயில் குடமுழுக்கையொட்டி புதன்கிழமை கணபதி, நவக்கிரஹ ஹோமம் நடைபெற்று காவிரியிலிருந்து புனிதநீரை நகரின் முக்கியவீதிகளின் வழியாக எடுத்து சென்று கோயிலை அடைந்தனா். பின்னா் மாலையில் முதற்கால யாக சாலை பூஜைகளும், வியாழக்கிழமை 2ம் கால கட்ட யாக சாலை வேள்வி பூஜைகள் நடைபெற்று பட்டாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டனா். விழாகுழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. ஜூன்.26ம் தேதி தொடங்கி 12 நாள்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளதென விழாக்குழுவினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments