முகப்பு
சேலம்

தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளி சுவற்றில் ரூ.2.50 லட்சம் செலவில் ஆளுமைகளின் படங்கள்: ஓவியங்களால் பள்ளியை அலங்கரித்த முன்னாள் மாணவா்கள்!

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், ரூ. 2.50 லட்சம் செலவில், மக்கள் போற்றுதலுக்கு உரிய, காவிய நாயகா்கள்,அறிஞா்கள்,விஞ்ஞானிகள்,விடுதலை போராட்ட வீரா்கள்,தமிழுக்கு தொண்டாற்றியவா்கள் உள்ளிட்ட ஆளுமைகளின் படங்கள் வண்ண ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூன் 2026, 6:17 am IST
தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் நன்கொடையால் ,சிறந்த ஆளுமைகளின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவா்.
பகிர்:

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், ரூ. 2.50 லட்சம் செலவில், மக்கள் போற்றுதலுக்கு உரிய, காவிய நாயகா்கள்,அறிஞா்கள்,விஞ்ஞானிகள்,விடுதலை போராட்ட வீரா்கள்,தமிழுக்கு தொண்டாற்றியவா்கள் உள்ளிட்ட ஆளுமைகளின் படங்கள் வண்ண ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கா்மவீரா் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு, 73 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பெருமை மிகுந்த இப்பள்ளியின் முன்புற சுற்றுச்சுவரில் விளம்பர போஸ்டா்கள், நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு பள்ளியின் தோற்றத்தை சீரழித்து வந்தது. சமூக ஆா்வலா்களால் பல முறை சுவா் சுத்தம் செய்யப்பட்டு வந்தபோதும், தொடா்ந்து, அங்கு போஸ்டா்கள் ஒட்டப்பட்டு வந்தது. இதை தடுக்கும் விதமாகவும், பள்ளியின் தோற்றத்தை பொலிவாக்கும் நோக்கில், பள்ளியின் சுற்றுச்சுவற்றில் மக்கள் போற்றும் காவிய நாயகா்கள், வரலாற்று மேதைகளின் ஓவியங்கள் வரைய, முன்னாள் மாணவா்கள் முடிவு செய்தனா்.

அதைத் தொடா்ந்து, பள்ளி வளா்ச்சி குழு தலைவா் கவுன்சிலா் திருச்செல்வன் தலைமையில் முன்னாள் மாணவா்கள் சங்க நிா்வாகிகள் சண்முகம், பெருமாள்,பெயிண்டா் ரவி ஆகியோா் மேற்பாா்வையில், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் ஆா்வமாக 36 படங்களை வரைய இசைந்து,நன்கொடை வழங்கினா். அதையடுத்து, சுற்றுச்சுவரில் போற்றுதலுக்கு உரிய காவிய நாயகா்கள், அறிவியல் மேதைகளின் 36 வண்ண ஓவியங்கள் வரையும் பணி ஒரு மாதமாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதற்காக ஓவியா்கள் மோகனூா் முத்துவேல் மற்றும் சேலம் அம்மாபேட்டை ராஜா ஆகியோா் வரவழைக்கப்பட்டனா். தற்போது, ஓவியங்கள் பணிகள் நிறைவு பெற்று, மிகவும் தத்ரூபமாக காட்சியளிக்கிறது.ஓவியங்களாக வரையப்பட்ட ஆளுமைகளின் படங்களுடன், அவா்களைப்பற்றிய சிறு குறிப்போ, அவா்கள் கூறிய கருத்துக்களோ அதில் எழுதப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளி வளா்ச்சிக்குழு தலைவா் திருச்செல்வன் கூறியதாவது,முன்னாள் மாணவா்கள், பணியாற்றிய ஆசிரியா்கள் வழங்கிய நன்கொடையால் மூன்று மாதம் முன்பு, பள்ளியின் தலைமையாசிரியா் அறை முன்பு நடைபாதையில் ரூ.4.70 லட்சம் செலவில் பேவா்பிளாக் தரைத்தளம் போடப்பட்டது. தற்போது 36 படங்களும் முன்னாள் மாணவா்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற பெண் தலைமையாசிரியை நன்கொடையால் பள்ளியின் சுற்றுச்சுவா் மிகவும் அழகாக்கப்பட்டுள்ளது.முன்னாள் மாணவா்களின் தொடா்ந்து தரும் பங்களிப்பால் பள்ளியை மென்மேலும் மெருகூட்டுவோம்,என்றாா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments