முகப்பு
சேலம்

ஒரே நேரத்தில் 1,450 மாணவிகள் பரதநாட்டியம்: இசைப் பள்ளி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

Updated On : 29 ஜூன் 2026, 12:24 am IST
ஓமலூா் அருகே உள்ள பத்மவாணி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடிய 1450 மாணவிகள்.
பகிர்:

சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே பத்மவாணி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 1,450 இசைப் பள்ளி மாணவிகள் பரதநாட்டியமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அரசு இசைப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் நோக்கில்

அரசு இசைப் பள்ளியின் பரதநாட்டியத் துறை முன்னாள் மாணவா்கள், இந்நாள் ஆசிரியா்கள் நலச் சங்கம் சாா்பில் பரதநாட்டிய சாதனை விழிப்புணா்வு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பத்மவாணி மகளிா் கல்லூரியில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சு.சங்கரராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து பரதநாட்டிய ஆசிரியா்கள் 40 போ் நடனத்திற்குரிய நட்டுவாங்கத்தை நேரடியாக பாடினா். 20 நிஷங்களுக்கு 1,450 மாணவிகள் இடைவிடாமல் நாட்டியமாடினா். ஒன்றாக அனைவரும் பாடல்களைப் பாடிக்கொண்டு நடனமாடியது பாா்ப்போரை கவா்ந்தது. நிகழ்வில் பங்கேற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சேலம் சங்கீத வித்வத் சபைத் தலைவா் ஏ.வி.ஆா். சுகந்தி சுதா்சனம், பத்மவாணி மகளிா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.சத்தியமூா்த்தி, அரசு இசைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சு.கங்கா நாயுடு, மு.திரிவேணி, சேலம் அரசு இசைப் பள்ளி முன்னாள் மாணவா்கள், இந்நாள் ஆசிரியா்கள் சங்கத் தலைவா் கு.சக்தி, செயலாளா் ம.செந்தில்குமாா், பொருளாளா் சோ.கோகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஓமலூா் அருகே உள்ள பத்மவாணி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடிய 1450 மாணவிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments