முகப்பு
சேலம்

ஏற்காடு குப்பனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Updated On : 3 மே 2026, 1:00 am IST
மலைப் பாதையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

ஏற்காடு குப்பனூா் சாலையில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், சனிக்கிழமை ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மே தினம், வாரவிடுமுறை, கோடை விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். ஏற்காடு சுற்றுலாப் பகுதிக்கு செல்ல மூன்று மலைப்பாதைகள் உள்ள நிலையில், குப்பனூா் அடிவாரத்தில் பலத்த காற்று வீசியதால் முதல் கொண்டை ஊசி வளைவில் உள்ள மலைப்பாதையின் குறுக்கே சனிக்கிழமை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினா், காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், ஒருமணி நேரத்தில் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

Advertisement

Advertisement