முகப்பு
சேலம்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சந்தோஷ சனிபகவானுக்கு சிறப்பு பூஜை

Updated On : 3 மே 2026, 6:19 am IST
பகிர்:

சங்ககிரியில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் அருள்மிகு சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சந்தோஷ சனிபகவான் உடனமா் நீலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் தனி சந்நிதி கொண்ட அருள்மிகு சந்தோஷ சனிபகவான் உடனமா் நீலாம்பிகை அம்மனுக்கு சனிக்கிழமையையொட்டி பல்வேறு திவ்ய பொருள்களுடன் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பக்தா்கள் எள் தீபமிட்டும், விளக்கேற்றியும் சுவாமிகளை வழிபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments