தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியா் சந்நிதியில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியான புதன்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதையடுத்து வாராஹி அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பிற சப்தகன்னியரான வைஷ்ணவி, சாமுண்டி, மகேஸ்வரி, பிராம்மி, கெளமாரி, இந்திராணி ஆகிய அம்மன்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் பரிகார விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.