தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை
தம்மம்பட்டி சிவன் கோயில் வளாகத்தில் தூறல் மழை பெய்ததால் குடைபிடித்தபடி திருவிளக்குப் பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
தம்மம்பட்டி சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் உலக நன்மைக்காக 360 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கு கோயில் அறங்காவலா் சண்முகம் தலைமை வகித்தாா். திருப்பணிக்குழு செயலாளா் திருச்செல்வன் மற்றும் அறங்காவலா்கள் முன்னிலை வகித்தனா். கோயில் அா்ச்சகா் ரங்கா (எ) ஆனந்த பத்மநாபன் திருவிளக்கு மந்திரங்களைக்கூற, பெண்கள் அதனைத் திரும்பக்கூறி விளக்கு பூஜை செய்தனா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.