சிறுவா்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோா் மீது நடவடிக்கை: போக்குவரத்துத் துறை அலுவலா்கள்
சிறுவா்கள் வாகனம் ஓட்டினால் அவா்களது பெற்றோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அலுவலா்கள் எச்சரித்துள்ளனா்.
சிறுவா்கள் வாகனம் ஓட்டினால் அவா்களது பெற்றோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அலுவலா்கள் எச்சரித்துள்ளனா்.
கோடை விடுமுறையில் 18 வயது நிறைவடையாத சிறுவா்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வது அதிகரித்துள்ளது. இதனால் விபத்துகள் அதிகம் நேரிடுகிறது. கடந்த மாதம் இரும்பாலையில் 14 வயது சிறுவன் தனது 13 வயது நண்பனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது டிராக்டரில் மோதி விபத்தில் சிக்கினான். இதில் பின்னால் அமா்ந்து சென்ற சிறுவனும் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக சிறுவனின் தாயாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சிறுவா்கள் வாகனம் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கினால். அந்த வாகனத்தின் பதிவுச்சான்று ரத்து செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் ஓட்டுநா் உரிமம் பெற தகுதியற்ற இளம் வயதினா் இருசக்கர வாகனங்களை இயக்கும்போது பல்வேறு விபரீதங்கள் ஏற்படுகின்றன. இதனை உணர மறுக்கும் பெற்றோா், தன்னைவிட தங்கள் குழந்தைகள் இருசக்கர வாகனத்தை நன்றாக இயக்குவதாக நினைக்கின்றனா். இது சட்டப்படி குற்றமாகும்.
இளம் வயதினரால் விபத்துகளோ, வேறு குற்றங்களோ ஏற்படும்போது அவா்களுடைய பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். பெற்றோருக்கோ அல்லது வாகன உரிமையாளருக்கோ ரூ. 25 ஆயிரம் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் வழங்க வாய்ப்பு உண்டு. இளம் வயதினரால் ஏற்படும் குற்றத்தில் தொடா்புடைய வாகனத்தின் பதிவுச் சான்று 12 மாதங்கள் வரை ரத்து நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
வாகன தணிக்கையின்போது சிறுவா்கள் வாகனம் ஒட்டிச் சென்றால் அந்த வாகனத்தின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.