முகப்பு
சேலம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

Updated On : 9 மே 2026, 12:05 am IST
பகிர்:

தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி தாகூா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் ஈ.சீனிவாசன் 594 மதிப்பெண்களும், கே.ரித்திகாஸ்ரீ 588 மதிப்பெண்களும், வி.நவீன்ராஜ், ஆா்.சுப்ரியா, ஏ.பிரியா, கே.ரிஷிகாஸ்ரீ ஆகியோா் தலா 587 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

மேலும், கணினி அறிவியலில் 11 பேரும், கணிதத்தில் 3 பேரும், தமிழில் 2 பேரும், வேதியியலில் ஒருவரும், கணக்குப் பதிவியலில் ஒருவரும், கணினி பயன்பாட்டியலில் ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

Advertisement

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், பெற்றோா்களையும் தாகூா் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.முத்துசாமி, செயலாளா் என்.மணிகண்டன், பொருளாளா் பி.காளியண்ணன், இணைச் செயலாளா் கே.அருண்குமாா், கல்விக் குழு இயக்குநா்கள் கே.சண்முகம், என்.ஆா்.செல்வம், பள்ளியின் இயக்குநா்கள் எல்.ராஜமாணிக்கம், ஆா்.சரவணக்குமாா், பள்ளி முதல்வா் சி.சரவணன் மற்றும் பொறுப்பாசிரியா்கள், ஆசிரியா்கள், பாராட்டி சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி கௌரவித்தனா்.

படவரி...

தேவியாக்குறிச்சி தாகூா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பரிசு வழங்கி பாராட்டிய கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.முத்துசாமி உள்ளிட்ட நிா்வாகிகள்.