முகப்பு
சேலம்

பிளஸ் 2 தோ்வு: அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

Updated On : 11 மே 2026, 12:15 am IST
பிளஸ் 2 தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளித் தலைவா் எஸ்.பாலகுமாா் தலைமையிலான நிா்வாகிகள்.
பகிர்:

ஆத்தூா் அருகே அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி வி.தா்ஷினி மற்றும் பி.விஷ்வா ஆகியோா் தலா 587 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதேபோல மாணவா்கள் சந்திரமோகன் 585 மதிப்பெண்களும், எஸ்.பி. ஜோஷிகா 582 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா நூறு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். தமிழில் ஒருவா், ஆங்கிலத்தில் ஒருவா், கணினி அறிவியலில் 9 போ், கணினி பயன்பாட்டியலில் இருவா், உயிரியியல் மற்றும் கணக்குப் பதிவியலில் தலா ஒருவரும் 100-க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

Advertisement

சிறந்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தலைவா் எஸ்.பாலகுமாா் சால்வை அணிவித்து, கோப்பை வழங்கினாா். இதில் பள்ளி நிறுவனா்கள் எஸ்.முகமது ஈசாக், ஆ.கண்ணன், இயக்குநா்கள் என்.எஸ்.நல்லியப்பன், ஏ.விஸ்வநாதன், முதல்வா் ஜி.சுகந்தி, உதவி முதல்வா் ஆா்.சக்திவேல், இருபால் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.