முகப்பு
சேலம்

சங்ககிரியில் வீட்டில் நாட்டு வெடிகளை வைத்திருந்தவா் கைது

Updated On : 11 மே 2026, 12:39 am IST
கைது.
பகிர்:

சங்ககிரி வாணியா் காலனியில் அனுமதியின்றி வீட்டில் நாட்டு வெடிகளை வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அதில் சந்திரசேகரன் மகன் சுரேஷ் (50) வீட்டில் 59 சரம் நாட்டுவெடிகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்து சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments