முகப்பு
மதுரை

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

மதுரை நகரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

Updated On : 12 மே 2013, 5:58 am IST
பகிர்:

மதுரை நகரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

   மதுரை திலகர்திடல் மற்றும் கரிமேடு பகுதிகளில் கும்பல் ஒன்று செல்போனை குறிவைத்து திருடி வந்ததாக புகார்கள் எழுந்தன. தனியாகச் செல்வோரை வழிமறிக்கும் அக்கும்பல், செல்போனை மட்டுமே பறிப்பதை வழக்கமாகவும் கொண்டிருந்தது.

  இது தொடர்பாக விசாரித்து குற்றவாளிகளைப் பிடிக்க, மாநகர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா ஆலோசனை அடிப்படையில், தனிப்படையினர் 4 பேரைக் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

  சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த கருத்தபாண்டி (24), மாயக்கண்ணன் (24), பாலமுருகன் (24) ஆகியோர் செல்போன் திருடிய கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறினர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 3 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

 அதேபோன்று, கீரைத்துறையைச் சேர்ந்த செல்வம் என்ற பொணந்தின்னி செல்வம் (16) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேலும், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைத் திருடிவந்ததும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து, மொத்தம் 6 சைக்கிள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

  இதுதவிர, சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை தீவிர விசாரணைக்கு உள்படுத்தி, பொருள்களை மீட்டுள்ளதாகவும், போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.