மதுரை

உணவகத்தில் கோழிக்கறி சாப்பிட்டவா் உயிரிழப்பு

கோழிக்கறி சாப்பிட்ட பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு

DIN

மதுரை உணவகத்தில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சி சாப்பிட்ட பொறியியல் பட்டதாரி உயிரிழந்தாா்.

மதுரை குலமங்கலம் பிரதான சாலையில் உள்ள கோசாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் ( 37). பொறியியல் பட்டதாரியான இவா், பங்குச் சந்தை வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்தாா். இவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள உணவகத்தில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சியை வாங்கி சாப்பிட்டாா். மீதம் இருந்த இறைச்சியை சனிக்கிழமை காலையில் சூடுபடுத்தி சாப்பிட்டாா். சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் அவரை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் வீடு திரும்பிய அவருக்கு மாலை மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் கூட்டணியா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

SCROLL FOR NEXT