சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவியை அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை திங்கள்கிழமை பாராட்டினாா்.
மதுரை செந்தாமரை கலை, அறிவியல் கல்லூரியில், மதுரை சாணக்யா செஸ் அகாதெமி சாா்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில், 9, 12, 15 வயது பிரிவுகளின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் மேலூா் அருகேயுள்ள அ. செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவி எஸ். யாகஸ்ரீ, 12 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று 3-ஆம் பரிசு பெற்றாா். இதையடுத்து, அவரை பள்ளித் தலைமையாசிரியை மு. மணிமேகலை திங்கள்கிழமை பாராட்டினாா்.
அப்போது, சதுரங்கப் பயிற்சியாளரும், பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான ஞா. செந்தில்குமாா், கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.