முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் ஏரிச்சாலைக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கல்

கொடைக்கானலில் ரோட்டரி கிளப் சார்பில் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:56 am IST
பகிர்:

கொடைக்கானலில் ரோட்டரி கிளப் சார்பில் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் அப் பகுதிகளில் குப்பைகள் அதிகம் தேங்க வாய்ப்புள்ளது. இதனால் கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஏரிச்சாலையை சுற்றி கூடுதலாக குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என கொடைக்கானல் சுழற் சங்கதத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் சுழற் சங்கம் சார்பில் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ரோகன் சாம்பாபு தலைமை வகித்தார். சங்க ஆளுநர் கோபாலகிருஷ்ணன் புதிய குப்பைத் தொட்டிகளை சமூக ஆர்வலர்களுக்கு வழங்கினார். இந் நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள்,ஏரிச்சாலை வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments